September 12, 2026
தேசியம்
செய்திகள்

வார விடுமுறையில் 50 millimetres வரை மழை?

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (04) எதிர்பார்க்கப்படும் கனமழையை முன்னிட்டு, Toronto பெரும்பாகத்திற்கு இந்த சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனியன்று 25 முதல் 50 millimetres வரை மழை பெய்யக்கூடும் என கனடிய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

சனி மாலை, இரவு ஆகிய நேரங்களில் மிகக் கனமழை பெய்யும் எனவும், இடியுடன் கூடிய மழையின் போது சில இடங்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் சுற்றுச்சூழல் துறை தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கு நிகழும் என்பதில் இன்னும் சில நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றது.

Related posts

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது!

Gaya Raja

Leave a Comment