புதிய ஆளுநர் நாயகத்திற்கு சாத்தியமான பொது வேட்பாளர்களின் பட்டியலை பிரதமர் அடுத்த சில நாட்களுக்குள் பெறவுள்ளார்.
அமைச்சர் Dominic LeBlanc இந்த தகவலை வெளியிட்டார். இந்த பட்டியலை தயாரிக்கும் ஆலோசனைக் குழு 12 கூட்டங்களை நடத்தி வேட்பாளர்களின் பட்டியலை தயாரித்துள்ளது.
பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த January மாதம் முன்னாள் ஆளுநர் நாயகம் Julie Payette தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.