September 30, 2026
தேசியம்
செய்திகள்

NATO தலைமையகத்தில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடியப் பெண்ணின் அடையாளம் வெளியானது

NATO இராணுவ தலைமையகத்தில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடியப் பெண் அடையாளம் காணப்பட்டார்.

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டு Belgian அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்ட கனடியப் பெண், NATO அமைப்பில் பயிற்சி பெறுவதற்கு முன்னதாக பல அரச நிறுவனங்களில் பணியாற்றியதாக தெரியவருகிறது.

இந்தப் பெண்ணை Biwei Zhang என CBC விசாரணை ஒன்று அடையாளம் கண்டுள்ளது.

கணினி பொறியாளரான இவர், Belgium நாட்டுக்கு குடிபெயர்வதற்கு முன்னர் கனடிய விண்வெளி நிறுவனம், கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றினார்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்  சந்தேக நபரின் வீடு, பணியிடம் ஆகியவற்றில் கடந்த வாரம்  சோதனை நடத்தப்பட்டது.

உளவு பார்த்தல், குற்றவியல் அமைப்பில் பங்கேற்றல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மறுநாள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Belgian நீதிமன்றங்கள், குற்றவியல் விசாரணைகளின் போது வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவதில்லை.

இந்த வழக்கு, கனடாவின் பாதுகாப்புச் சோதனை செயல்முறைகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Biwei Zhang  கனடிய அரச நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் பணியாற்றினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கடந்த வாரம் உறுதியளித்தார்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பெண்ணுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

முன்னாள் துணைப் பிரதமரின் பதவி விலகல் குறித்து Mark Carney கருத்து

Lankathas Pathmanathan

மற்றுமொரு New Brunswick அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment