தேசியம்
செய்திகள்

Destination கனடா உயர் பதவிக்கு முன்னாள் NDP தலைவர் நியமனம்?

Destination கனடா உயர் பதவிக்கு முன்னாள் NDP தலைவர் நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது.

முன்னாள் NDP தலைவர் Jagmeet Singh, Destination கனடா அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதை தொடர்ந்து, மத்திய நாடாளுமன்ற ஓய்வூதியத்தை பெறுவதற்கான தகுதியை Jagmeet Singh பெற்ற பின்னரே இந்த நியமனம் குறித்த சாத்தியக்கூறு எழுந்துள்ளது.

நாட்டின் தேசிய சுற்றுலா சந்தைப்படுத்தல் அமைப்பு Destination கனடா ஆகும்.

அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வழங்கப்படும் ஊதியம் ஆண்டுக்கு $3,50,000 வரை இருக்கும்  என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நியமனம் எதிர் கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jagmeet Singh-கிற்கு சுற்றுலாத் துறையில் ஏதேனும் அனுபவம் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர், ‘நம்பிக்கை ஆதரவு ஒப்பந்தம் மூலம் முன்னாள் பிரதமர் Justin Trudeau-வை பல ஆண்டுகள் ஆட்சியில் தக்கவைப்பதில் Jagmeet Singh முக்கிய பங்காற்றினார்.

March 2022-ல் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, தங்கள் முன்னுரிமைக்குரிய சில விடயங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், முக்கிய நம்பிக்கை வாக்கெடுப்புகள் வரவு செலவுத் திட்ட  நடவடிக்கைகளில் LIberal கட்சிக்கு NDP ஆதரவளித்தது.

இந்த ஒப்பந்தம் 2024-ல் முடிவுக்கு வரும் வரை Justin Trudeau அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க வழிவகுத்தது.

முன்னர் வழக்கறிஞரான Jagmeet Singh, 2017 முதல் 2025 வரை NDP தலைவராக பணியாற்றினார்.

மேலும் 2019 முதல் 2025 வரை British Colombia மாகாணத்தின் Burnaby South தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

2025 மத்திய தேர்தலில், Jagmeet Singh தலைமையிலான NDP கட்சி, அதன் வரலாற்றிலேயே மிக மோசமான தேர்தல் முடிவைப் பெற்றது.

அதன் பின்னர் அவர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

Related posts

Trillium அறக்கட்டளைக்கு Sugshe குழும நிறுவனங்களின் கீழியங்கும் சரவணபவன் உணவகம் $100,000 நன்கொடை

Lankathas Pathmanathan

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

Leave a Comment