தேசியம்
செய்திகள்

குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தாய் மீது பதிவு

Edmontonனில் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள FBI வழங்கிய தகவலில் அடிப்படையில் இந்த குழந்தை கடந்த சனிக்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளது.

கடந்த October மாதம் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டில் Californiaவில் 30 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னணியில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

Edmontonனில் கைது செய்யப்பட்டவர் 35 வயதான பெண் என தெரியவருகிறது.

மீட்கப்பட்ட குழந்தை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கைதான பெண் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, February 22 ஆம் திகதி மாகாண நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளார்.

Related posts

புதிய சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த மாகாணங்களின் நிலைப்பாட்டை கோரும் மத்திய சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக் கொள்கைகளை அமைக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Gaya Raja

மூன்று போராட்டங்கள் – காவல்துறை அதிகாரி காயம் – மூன்று பேர் கைது – காவல்துறை அதிகாரி கைது

Lankathas Pathmanathan

Leave a Comment