தேசியம்
செய்திகள்

Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள்!

Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இது 2023இல் பதிவான மொத்த தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும்.

எட்டாவது தட்டம்மை நோயாளர் Hamilton நகரில் அடையாளம் காணப்பட்டனர்.

அண்மையில் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் வழியாக பயணித்த ஒரு குழந்தைக்கு தட்டம்மை நோய் கண்டறியப்பட்டது.

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்தபோது, நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தைக்கு இந்த நோய்  இருப்பதை Hamilton பொது சுகாதார சேவைகள் மையம் உறுதிப்படுத்தியது.

இந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2024 இல் இதுவரை Ontarioவில் எட்டு ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

இவர்களில், ஆறு பயணம் தொடர்பானவை,  இரண்டு வெளிப்பாட்டின் அறியப்படாத மூலத்தைக் கொண்டிருந்தன.

2023 ஆம் ஆண்டில், Ontarioவில் ஏழு தட்டம்மை நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டன.

Related posts

Ontario Liberal கட்சி தலைவர் அடுத்த வாரம் தெரிவு

Lankathas Pathmanathan

இரத்து செய்யப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

B.C. வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர்?

Lankathas Pathmanathan

Leave a Comment