தேசியம்
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி தலைவரை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்காவை சந்தித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் புதன்கிழமை (13) காலை இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் இந்த சந்திப்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனடிய  உயர்ஸ்தானிகர்  அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் Patrick Pickering, தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத் ஆகியோர் பங்கேற்றனர்.

விரைவில் அநுர குமார திசாநாயக்க கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பயணம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் Torontoவில் March மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan

மீண்டும் உயர்வடையும் B.C. குறைந்தபட்ச ஊதியம்

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment