கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமைச்சரவையின் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
கனடாவின் போக்குவரத்து அமைச்சராக (Minister) அனிதா ஆனந்த், பிரதி அமைச்சராக (Deputy Minister) அருண் தங்கராஜ் ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
மீண்டும் அமைச்சரானார் அனிதா ஆனந்த்!
தமிழரான அனிதா ஆனந்த், கனடாவின் போக்குவரத்து அமைச்சராக ( Minister of Transport) வியாழக்கிழமை (19) பதவியேற்றார். Justin Trudeau அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. ஏற்கனவே கருவூல வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு பதவி புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னேரே வேறு அமைச்சு பதவிகளை வகித்தவராவார்.

அனிதா ஆனந்த், கனடாவில் அமைச்சு பதவி வகித்த முதலாவது தமிழர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை ஒரு தமிழராவார்.
போக்குவரத்து துணை அமைச்சர் அருண் தங்கராஜ்!
போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் February 20, 2023 நியமிக்கப்பட்டவர். இவர் முன்னர் குடிவரவு, அகதிகள், குடியுரிமை இணை துணை அமைச்சராக (Associate Deputy Minister at Immigration, Refugees and Citizenship) இருந்தார்.
