தேசியம்
செய்திகள்

World Series 2025: நான்காவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி

World Series 2025 தொடரில் நான்காவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் 2 க்கு 2 என்ற சம நிலையில் உள்ளது.

இம்முறை World Series தொடரில் Toronto Blue Jays அணியும் Los Angeles Dodgers அணியும் எதிர்கொள்கின்றன.

இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணியும், இரண்டாவது,  மூன்றாவது ஆட்டங்களில் Dodgers அணியும் வெற்றி பெற்றது.

நான்காவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (28) இரவு Dodger மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 6 க்கு 2 என்ற ஓட்ட வித்தியாசத்தில் Blue Jays அணி வெற்றி பெற்றது.

இந்த தொடரின் ஐந்தாவது ஆட்டம் புதன்கிழமை (29) இரவு Dodger மைதானத்தில் நடைபெறுகிறது.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடரில் போட்டியிடுகிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றி பெறும் அணி, World Series பட்டத்தை வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சித் தலைவர்களின் விவாதங்களில் இருந்து வெளியேற்றப்பட்டது பசுமைக் கட்சி!

Lankathas Pathmanathan

பதவி விலகும் சீனாவுக்கான கனடிய தூதர்!

Lankathas Pathmanathan

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாட்டை கட்டாயமாக்கும்  திட்டம் குறித்து Alberta தனியுரிமை ஆணையர் கவலை!

Lankathas Pathmanathan

Leave a Comment