Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மாகாண முதல்வர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறு Alberta முதல்வர் கனடிய பிரதமரிடம் வலியுறுத்தினார்.
கனடிய பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (13) நடைபெற்றது.
கடந்த கோடை காலத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் முதல் முறையாக Calgary நகரில் சந்தித்துப் பேசினர்.
அடுத்த மாதம் அமுலுக்கு வரும் Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மாகாண முதல்வர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
Carbon வரி உயர்வுக்கு இடைநிறுத்தம் தேவை என்று ஏழு மாகாண முதல்வர்கள் பரிந்துரைத்துள்ளனர் என இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Danielle Smith கூறினார்.