தேசியம்
செய்திகள்

OPP அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Ontario மாகாண காவல்துறை அதிகாரிகள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

கடமையின் போது கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு தனது இரங்கலை பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோரும் கொல்லப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Ontario முதல்வர் Doug Ford, Clarence-Rockland நகர முதல்வர் Mario Zanth உள்ளிட்ட பலரும் இந்த சம்பவம் குறித்து தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Manitobaவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Mexico: நிலைமை வழமைக்கு திரும்புகிறது?

Lankathas Pathmanathan

வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!

Gaya Raja

Leave a Comment