தேசியம்
செய்திகள்

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் கனடா!

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்தது.

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கனடிய பிரதமர் Mark Carney அறிவித்தார்.

இந்த அங்கீகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பிரதிபலிக்கும் சுயநிர்ணய உரிமை, அடிப்படை மனித உரிமைகலில் கனடாவின் நிலையான கொள்கையுடன் உறுதியாக ஒத்துப் போகின்றன என ஞாயிற்றுக்கிழம (21) வெளியிட்ட ஒரு அறிக்கையில் Mark Carney தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில் கனடிய அரசின் இந்த அறிவித்தல் வெளியானது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிரதான சர்வதேச நட்பு நாடுகள் கனடாவுடன் இணைந்து சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன.

இந்த வாரம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபை அமர்வின் போது ஏனைய நாடுகள் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.

Hamas அரசை பிரதமர் Mark Carey அங்கீகரித்துல்லாத Conservative கட்சி
ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.

Related posts

கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி நடைமுறைக்கு வந்தது!

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கைகள்

Lankathas Pathmanathan

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Lankathas Pathmanathan

Leave a Comment