November 16, 2025
தேசியம்
செய்திகள்

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

NHL playoff தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி  வெளியேற்றப்பட்டுள்ளது.

Stanley Cup Playoffs தொடரின் முதலாவது சுற்றில் Boston Bruins அணியிடம் Maple Leafs அணி தோல்வியடைந்தது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில் நான்கு ஆட்டங்களில் Bruins அணியும் மூன்று ஆட்டங்களில் Maple Leafs அணியும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு Maple Leafs அணி NHL playoff தொடரில் இரண்டாவது சுற்றில் வெளியேற்றப்பட்டது.

இம்முறை Maple Leafs அணி முதலாவது சுற்றில் வெளியேற்றப்பட்டது.

Toronto Maple Leafs அணி 1967 முதல் Stanley கோப்பையை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் Vancouver Canucks, Edmonton Oilers ஆகிய அணிகள் playoffs தொடரில் மீதமுள்ள இரண்டு கனடிய அணிகளாகும்.

இந்த இரு அணிகளும் இரண்டாவது சுற்றில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வார்கள்.

Related posts

பிரதமரின் தேர்தலுக்கான கோரிக்கையை மறுக்க வேண்டும் – ஆளுநர் நாயகத்திற்கு புதிய மனு!

Gaya Raja

2024 Paris Olympics: கனடா வெற்றி பெற்ற 26ஆவது பதக்கம்

Lankathas Pathmanathan

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment