தேசியம்
செய்திகள்

நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு கனடா தடை

நான்கு இஸ்ரேலிய ‘தீவிரவாத குடியேற்றவாசிகளுக்கு’ கனடா தடை விதித்துள்ளது.

பாலஸ்தீனியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.

இவர்கள் பாலஸ்தீனிய குடிமக்கள், மேற்குக் கரையில் உள்ள அவர்களின் சொத்துக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் மீது ஏற்கனவே இந்த ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவும் இவர்கள் மீது தடை விதிக்கும் என கடந்த February மாதம்  வெளியுறவு அமைச்சர் Mélanie Joly கூறியிருந்தார்.

இந்த பொருளாதாரத் தடைகள் கனடாவின் அணுகுமுறையில் ஒரு முன்னேற்றம் என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசி கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment