தேசியம்
செய்திகள்

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

British Columbiaவில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து  215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
வியாழக்கிழமை Kamloops நகரில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் 1978இல் மூடப்பட்ட Kamloops குடியிருப்பு பாடசாலையின் மாணவர்கள் என தெரியவருகிறது.

இந்த கண்டுபிடிப்பை வியாழக்கிழமை Tk’emlups te Secwepemc First Nationஇன் தலைவர் அறிவித்தார். இது கனடாவின் வரலாற்றின் வெட்கக்கேடான அத்தியாயத்தை நினைவூட்டுவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

மீட்கப்பட்ட சில எச்சங்களில்  மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்களின் மரணங்கள் எப்போது நிகழ்ந்தது மற்றும் இவர்களின் இறப்புக்கான காரணங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

Related posts

Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன: Conservative கட்சி

Lankathas Pathmanathan

2 ஆவது தடுப்பூசி வழங்கலுக்கு போதுமான
AstraZeneca கனடாவில் இருக்கும்!

Gaya Raja

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!