September 14, 2026
தேசியம்
செய்திகள்

Montreal மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் – தடுக்க முயன்ற மூவர் காயம்

Montreal பகுதியில் உள்ள மசூதியில் மூவர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

மசூதிக்குள் கத்தியுடன் ஒருவர் நுழைந்ததில் மூவர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் தொழுகையின் போது மசூதியில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் சென்றபோது அவரை தடுக்க முயன்ற மூன்று பேர் காயமடைந்தனர்.

Montreal புறநகர்ப் பகுதியான Châteauguay என்ற இடத்தில இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

காயமடைந்த மூன்று ஆண்களும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும்  அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனவும் தெரியவருகின்றது.

இவர்களில் ஒருவர் தனது காயத்துக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதில் சந்தேக நபரான 24 வயதுடைய ஆண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக பதிவான குற்றசாட்டுகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் Justin திருத்தேவூ காயமடைந்தவர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் “மிகவும் கவலை அடைவதாக” கனடிய முஸ்லிம்களின் தேசிய அவை – National Council of Canadian Muslims (NCCM) கூறியது.

Related posts

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணை: Ontario முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Leave a Comment