September 29, 2026
தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் புதிய தலைவர் November 21 தெரிவு

Ontario Liberal கட்சியின் புதிய தலைவர் November மாதம் அறிவிக்கப்படவுள்ளார்.

November 21 அன்று Ontario Liberal கட்சியின் புதிய தலைவர் அறிவிக்கப்படவுள்ளார்.

Liberal கட்சி அதன் தலைமைத் தேர்தல் விவரங்களை சனிக்கிழமை (07) ஒரு அறிக்கையில் வெளியிட்டது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க, Liberal கட்சி உறுப்பினர்கள் November 9 முதல் 20 வரை தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்..

தர வரிசைப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி இணையம் மூலம் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சி தெரிவித்தது.

இந்தத் தலைமைப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தற்போதைய Ontario Liberal மாகாண சபை உறுப்பினர்கள்  Lee Fairclough, Adil Shamji, Rob Cerjanec ஆகியோரும் இந்த போட்டியில் இணைய பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Bonnie Crombie கடந்த மாதம் பதவி விலகிய நிலையில் Ontario Liberal கட்சிக்கான புதிய தலைவரை தேடும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை Ottawa தெற்கு மாகாண சபை உறுப்பினரான John Fraser அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவி கோரல்!

Lankathas Pathmanathan

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Lankathas Pathmanathan

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan

Leave a Comment