தேசியம்
செய்திகள்

Toronto வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Toronto பெரும்பாகத்தை அண்மித்த வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது.

Torontoவின் வடக்கே உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை – 28 – இரவு முதல் பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

இந்த எச்சரிக்கை Bracebridge, Gravenhurst, Huntsville, Haliburton, Owen Sound, Tobermory உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் உள்ளது.

இந்த பகுதிகளில் வெள்ளிக்கிழமைக்குள் – 29 – 30 cm வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைக்குள் – 30 – 50 cm வரை பனிப்பொழிவு பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் Torontoவில் சிறிய அளவில் பனி தூரல் சாத்தியமாகும் என கூறப்படுகிறது.

ஆனால் இது குறிப்பிடத்தக்க அளவிலான பனிப்பொழிவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படவில்லை.

Related posts

கனடாவின் புவியியல் நிலைமுன்னர் வழங்கிய பாதுகாப்பை இனி வழங்காது: அமைச்சர் ஆனந்த்  

Lankathas Pathmanathan

வழமையான கல்வி முறைக்கு திரும்பும் Ontario உயர்நிலை பாடசாலைகள்

Lankathas Pathmanathan

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment