தேசியம்
செய்திகள்

வைத்தியசாலை பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் NDP தலைவர் வலியுறுத்தல்

வைத்தியசாலைகளில் எதிர்கொள்ளப்படும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் Justin Trudeauவிடம் NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தியுள்ளார்.

Ontario தாதியர் சங்க தலைவருடன் வியாழக்கிழமை (04) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் Singh இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

அதிக சர்வதேச பயிற்சி பெற்ற தொழிலாளர்களை பணி அமர்த்துவதற்கான செயல்முறையை நெறிப்படுத்துதல் இதற்கு ஒரு வழி என NDP தலைவர் கூறினார்.

நீண்ட கால பராமரிப்பு பணியாளர்களை பணி அமர்த்துதல், அவர்களின் சம்பளத்தை அதிகரித்தல் ஆகிய கோரிக்கைகளையும் Singh முன்வைத்துள்ளார்.

ஊழியர் நெருக்கடி காரணமாக அண்மைய காலத்தில் மருத்துவமனை அவசர அறைகளும், தீவிர சிகிச்சை பிரிவுகளும் மூடப்படும் நிலையில் NDP தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட இணக்கம்

Lankathas Pathmanathan

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Lankathas Pathmanathan

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment