தேசியம்
செய்திகள்

மீண்டும் ஆர்மபித்த நாடாளுமன்ற அமர்வு

இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு திங்கட்கிழமை (31) மீண்டும் ஆரம்பித்தது.

பாரவண்டி ஓட்டுனர்களின் போராட்டம் தொடரும் நிலையில் புதிய ஆண்டுக்கான அமர்வு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் திங்கள் காலை ஆரம்பித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மெய்நிகர் வழியாக இந்த அமர்வுகளில் பங்கேற்றனர்

இந்த அமர்வு ஆரம்பிப்பதை தாமதப்படுத்தும் எந்த விவாதமும் இடம்பெறவில்லை என அரசாங்க அவைத் தலைவர் Mark Holland கூறினார்.

முதலாவது நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது பாரவண்டி ஓட்டுனர்களின் போராட்டம் முன்னணி வகித்தது.

COVID தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரதமர் Justin Trudeau இந்த அமர்வில் மெய்நிகர் வழியாக பங்கேற்றார்.

Conservative தலைவர் Erin O’Tooleலிடமிருந்து பிரதமர் பல கேள்விகளை எதிர்கொண்டார்.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

வார விடுமுறையில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திங்களன்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள பார ஊர்தி ஓட்டுனர்களை Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

Ottawaவில் இந்த வார இறுதியில் நிகழ்ந்தது தவறானது என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

Related posts

Strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment