தேசியம்
செய்திகள்

Scarboroughவில் மசூதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஐந்து பேர் காயம்

Scarboroughவில் மசூதிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை (16) அதிகாலை Scarboroughவில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் நள்ளிரவு பிரார்த்தனையை முடித்துக் கொண்ட ஒரு குழு தாக்கப்பட்டதாக Toronto காவல்துறை கூறுகிறது.

Markham and Lawrence சந்திப்பிற்கு அருகாமையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இஸ்லாமிய புனித மாதமான ரமலான் பண்டிகை காலத்தில்,  நள்ளிரவு 1 மணியளவில் தொழுகையை முடித்துவிட்டு ஒரு வாகன நிறுத்துமிடத்தில் கூடியவர்கள் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சம்பவ இடத்தில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த ஐந்தாவது நபர், உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

காயமடைந்தவர்கள் 28 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், சிலருக்கு  திருமணமாகி குழந்தைகள்  உள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த ஐவரில் மூன்று பேர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய இருவரும் விரைவில் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Markham வீதியில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்து துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

மத நம்பிக்கை காரணமாக இவர்கள் குறிவைக்க பட்டார்கள் என்பதை இப்போது கூற முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து Toronto காவல்துறையின் வெறுப்புக் குற்றவியல் பிரிவு (hate crimes unit) விசாரணையில் ஈடுபட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தவர்கள் காவல்துறையின் 43ஆவது பிரிவு அல்லது குற்றத் தடுப்பாளர்களை அநாமதேயமாக தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

Related posts

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

கடந்த காலாண்டில் கனேடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை

Lankathas Pathmanathan

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan

Leave a Comment