தேசியம்
செய்திகள்

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Carbon வரி எதிர்ப்பு Trans-கனடா நெடுஞ்சாலை ஆர்ப்பாட்டம் RCMPயால் கண்காணிக்கப்படுகிறது.

Calgary நகருக்கு மேற்கே நடந்த Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுப் பாதுகாப்பைத் தொடர்ந்து பராமரித்து வருவதாக Alberta RCMP கூறுகிறது.

அந்த போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையை விட்டு விலகி இருப்பதையும் அவர்களின் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்க கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதாக RCMP கூறுகிறது.

பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக Trans-கனடா நெடுஞ்சாலையில் போராட்டம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பங்கேற்பாளர்களின் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை மதிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

Lankathas Pathmanathan

Bramptonனில் தமிழர் சமூகத்துக்கு நினைவுச் சின்னம் – தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

Lankathas Pathmanathan

March இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் Ontario உள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment