தேசியம்
செய்திகள்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு!

அனைத்து கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் இந்த ஆண்டு $8,500 முதல் $17,000 வரை ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு ஒவ்வொரு ஆண்டும் April 1 ஆம் திகதி மாற்றி அமைக்கப்படுகிறது.

முக்கிய தனியார் துறை சராசரி ஊதிய உயர்வுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு 4.4 சதவீதமாக அமைகிறது.

சபாநாயகர் அலுவலகத்தின் ஊடக உறவுகளின் இயக்குனர் Mathieu Gravel இந்த தகவலை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு கனடிய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உள்ளடங்குகிறது.

April 1, 2024 நிலவரப்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை சம்பளம் கடந்த ஆண்டு இருந்த 194,600 டொலர்களில் இருந்து 8,500 டொலர்கள் அதிகரித்து 203,100 டொலர்களாக உள்ளது.

பிரதமர்  Justin Trudeauவின் இந்த ஆண்டு மொத்த சம்பளம் $406,200 ஆகும்.

இது கடந்த ஆண்டு $389,200 இல் இருந்து $17,000 அதிகரித்துள்ளது.

ஒரு அமைச்சரின் மொத்த ஊதியம் இந்த ஆண்டு $299,900 ஆக உயர்ந்தது.

இது 2023ல் $291,400ல் இருந்து $8,500 அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் Conservative கட்சியின் தலைவருமான Pierre Poilievre பெறும் இந்த ஆண்டின் மொத்த சம்பளம் $299,900.

2023 இல் $287,400 இல் இருந்து அவரின் ஊதியம் $12,500 அதிகரித்துள்ளது.

NDP தலைவர் Jagmeet Singh உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு மொத்த ஊதியம் 2023ல் $260,400 ஆக இருந்து இந்த ஆண்டு $11,300 அதிகரித்து $271,700 ஆக உள்ளது.

அமைச்சர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவர்கள் இல்லாத பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இந்த ஆண்டு $203,100 ஊதியம் பெற்றனர்.

2023 இல் $194,600 இல் இருந்து இது $8,500 அதிகரித்துள்ளது.

Related posts

தைவான் நில நடுக்கத்தில் காணாமல் போன கனடியர் மீட்கப்பட்டார்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment