தேசியம்
செய்திகள்

பார வண்டி ஓட்டுனர்களின் ஆர்ப்பாட்டத்தால் மிரட்டப் படவில்லை: பிரதமர் Trdueau

மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (31) தலைநகர் Ottawaவில் தொடரும் பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டங்களில் சில பங்கேற்பாளர்களின் நடவடிக்கையை பிரதமர் Justin Trdueau கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் தானும் அரசாங்கமும் மிரட்டப் படவில்லை என திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறினார்.

கடந்த சில நாட்களாக, போராட்டம் நடத்திய சிலரின் நடத்தையால் கனேடியர்கள் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்துள்ளனர் எனவும் இந்த செய்தியாளர் சந்திப்பில் Trudeau கூறினார்.

Liberal அரசாங்கத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாட எந்த திட்டமும் இல்லை எனவும் Trudeau தெரிவித்தார்.

திங்கட்கிழமையும் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக தலைநகரில் உள்ள பெரும்பாலான வீதிகள் முடக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கடந்த வார இறுதியில் பாதுகாப்புக் கருதி பிரதமரும் அவரது குடும்பமும் வேறு இடமொன்றிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

Lankathas Pathmanathan

Leave a Comment