தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமருக்கும் COVID தொற்று உறுதி

கனடிய பிரதமர் Justin Trudeauவுக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (31) காலை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம் பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சென்ற வாரம் வியாழக்கிழமை முதல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

திங்களன்று அவரது இரண்டாவது குழந்தைக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக Trudeau அறிவித்தார்.

இந்த நிலையில் தான் வீட்டில் இருந்து பணிகளை தொடரவுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

Trudeau மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

பிரதமரும் அவரது குழந்தைகளும் விரைவாக நலம் பெற வேண்டும் என Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய வீட்டு விலைகள் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்: TD வங்கி

Lankathas Pathmanathan

முன்னாள் PC அமைச்சர் தொடர்ந்து கட்சில் நீடிப்பாரா?

Lankathas Pathmanathan

Leave a Comment