Alberta மாகாண வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், மாகாணப் பிரிவினை உள்ளிட்ட பொதுவாக்கெடுப்பிற்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் 1 Million வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
Alberta தேர்தல் திணைக்களம் வெள்ளிக்கிழமை (16) மதியம் இந்த அதிகாரப்பூர்வ தரவை வெளியிட்டது.
அஞ்சல் வழி சிறப்பு வாக்குச்சீட்டுகள் (Special Ballots), முதல் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் முன்கூட்டிய வாக்கு பதிவில் இந்த பிரம்மாண்ட எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.
Alberta வாக்காளர்களிடையே இந்தத் தேர்தல் குறித்து எழுப்பியுள்ள பிரம்மாண்ட ஆர்வத்தை இந்த எண்ணிக்கை பறைசாற்றுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மாகாண மக்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் காட்டும் தீவிரத்தை இந்த 1 Million வாக்கு பதவி பறைசாற்றுகிறது.
இந்த நிலையில் பிரதமர் Mark Carney, எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre ஆகியோர் கடந்த சில நாட்களாக பிரிவினைக்கு எதிராக Alberta மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவில் Alberta நீடிப்பதற்கு ஆதரவாக தான் வாக்களித்திருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த முன்கூட்டிய வாக்களிக்க சனிக்கிழமை (17) இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும் என Alberta தேர்தல் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
