November 13, 2025
தேசியம்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி! – 10 பேர் காயம்!

Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு Manitobaவில் உள்ள Carberry நகரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

வியாழக்கிழமை (15) காலை ஒரு பேருந்து truck வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த பேருந்தில் சுமார் 25 பேர் பயணித்ததாக RCMP தெரிவித்தது.

பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என தெரியவருகிறது.

Sand Hills சூதாட்ட விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தை ஒரு நம்ப முடியாத துயரம் என பிரதமர் Justin Trudeau விபரித்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து Manitoba முதல்வர் Heather Stefanson ஒரு அறிக்கை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் Manitoba சட்டமன்ற கட்டிடத்தில் உள்ள கொடிகள் அரைக்கம்பத்தில் தாழ்த்தப்பட்டன.

Related posts

Lotto Max சீட்டிழுப்பில் $133 மில்லியன் வெல்லலாம்

Lankathas Pathmanathan

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment