தேசியம்
செய்திகள்

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Scarborough – Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதிக்கான இடைதேர்தல் July மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார்.

Scarborough – Guildwood தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என Ontario NDP தலைவர் Marit Stiles தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (30) காலை இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை (01) நடைபெறும் வேட்பு மனு கூட்டத்தில் Scarborough – Guildwood தொகுதி கட்சி உறுப்பினர்களால் இந்த நியமனம் உறுதி செய்யப்படும் என NDP கட்சி தெரிவித்தது.

Related posts

இஸ்லாமிய அரசுக்கு ஆதரவு? Quebec நபர் கைது!

Lankathas Pathmanathan

அமைதிக்கான Nobel பரிசு பெற்ற நவநீதம் பிள்ளைக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை பாராட்டு!

Lankathas Pathmanathan

அமெரிக்க தேர்தல் தொடர்பாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment