தேசியம்
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் பெரும் சேவை இடையூறுகளை ஏற்படுத்தும்

தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக பெரும் சேவை இடையூறுகள் ஏற்படும் என தொழிற்சங்கமும் அரசாங்கமும் எச்சரித்தன.

வியாழக்கிழமை (20) தொடர்ந்தும் இரண்டாவது நாளாக மத்திய பொது சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவை கூட்டணிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை புதன்கிழமை (19) ஆரம்பித்தனர்.

இதன் மூலம் சுமார் 155 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் கனடா வருவாய் முகமை துறையை சேர்ந்த 35 ஆயிரம் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.

இந்த நிலையில் இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

Related posts

காணாமல் போன Sudbury நகர சபை உறுப்பினர் மரணம்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை Trudeau வரவேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment