September 15, 2026
தேசியம்
செய்திகள்

காணாமல் போன Sudbury நகர சபை உறுப்பினர் மரணம்!

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த Sudbury நகர சபை உறுப்பினர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

Sudbury இரண்டாவது தொகுதி நகர சபை உறுப்பினர் Michael Vagnini காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டது.

இவர் கடந்த மாதம் 27ஆம் திகதி  இரவு 11 மணி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இவரது உடலின் எச்சங்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (13) கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது.

“Michael Vagnini அவரது வாகனத்தில் இருந்து சிறிது தூரத்தில் இறந்து கிடந்தார்” என Sudbury காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவரது மரண விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் இவரது மரணத்தில் சந்தேகங்கள் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இவரது மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை விரைவில் நடத்தப்படவுள்ளது.

இவரது மரணத்திற்கு நகர முதல்வர் Paul Lefebvre தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Michael Vagnini  முதலில் 2014ஆம் ஆண்டில் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

Patrick Brown முன்னெடுத்த $1,700 நிதி சேர் நிகழ்வு

Lankathas Pathmanathan

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

Gaya Raja

NATO இலக்கை அடைவதற்கான திட்டத்தை அறிவிக்கவுள்ள கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment