February 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடா தின வார இறுதியில் 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் பாதிப்பு?

ஏறக்குறைய 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் வார இறுதியில் தாமதங்களை எதிர்கொண்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.

கடந்த சனிக்கிழமை (01) முதல் திங்கட்கிழமை (03) வரை கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளிலும் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை தாமதங்களை எதிர்கொண்டன – அல்லது இரத்து செய்யப்பட்டன.

தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்டாலும் அனைவரும் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை என Air கனடா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நாளாந்தம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தமது விமான சேவையை உபயோகிப்பதாக Air கனடா தெரிவித்தது.

Related posts

சூடான் தலைநகர் தூதரகத்தை மூடிய கனடா

இலங்கையருக்கு நிதி சேகரித்த Ottawa நகர முதல்வர்!

Lankathas Pathmanathan

புதிய அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் வழங்கப்படவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment