September 18, 2026
தேசியம்
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள்

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பாளர் நியமனக் காலம் வெள்ளிக்கிழமை (26) மதியம் 2 மணியுடன் முடிவடைந்தது.

இந்த தேர்தலில் நான்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட, முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நகரசபை உறுப்பினர்களான Carolyn Parrish, Stephen Dasko, Alvin Tedjo, Dipika Damerla ஆகிய  நகரசபை உறுப்பினர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தவிரவும் முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் Brian Crombie இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

Mississauga வாக்காளர்கள் புதிய நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் ஆறு வார இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது நடைபெறுகிறது.

நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் June மாதம் 10ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் Mississauga நகரின் ஏழாவது நகர முதல்வராக பதவி ஏற்பார்.

Mississauga நகரின் ஆறாவது நகர முதல்வராக Bonnie Crombie 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகள் சேவையாற்றினார்.

இந்த தேர்தலில் முன்கூட்டிய வாக்குப்பதிவு May 24, 25 ஆம் திகதிகளில் Mississauga Civic Centreரில் நடைபெறுகிறது.

தொடர்ந்து முன்கூட்டிய வாக்குப்பதிவு June 1, 2 ஆம் திகதிகளில் Mississauga நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும்.

Ontario மாகாண Liberal கட்சி தலைவர் பதவியை வெற்றியடைந்த நிலையில் Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie விலகியிருந்தார்.

புதிய நகர முதல்வர் தெரிவாகும் வரை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, தொகுதி வாரியாக நகரசபை உறுப்பினர்கள் Mississauga நகர முதல்வர் பதவியில் செயலாற்றி வருகின்றனர்.

Related posts

கனடாவில் 30 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றனர்

Gaya Raja

ஐந்து ஆண்டுகளில் Toronto வீட்டு விலைகள் 42 சதவீதம் – வாழ்க்கைச் செலவு 17 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Trillium அறக்கட்டளைக்கு Sugshe குழும நிறுவனங்களின் கீழியங்கும் சரவணபவன் உணவகம் $100,000 நன்கொடை

Lankathas Pathmanathan

Leave a Comment