தேசியம்
செய்திகள்

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்துமாறு கனடிய வங்கியிடம் மத்திய அரசு கோர வேண்டும் என NDP தெரிவிக்கின்றது.

இந்த விடயத்தில் British Columbia மாகாண அரசாங்கத்தின் வழியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்தது

British Columbia மாகாண முதல்வர் David Eby கடந்த வாரம் மத்திய வங்கிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டாம் என British Columbia மாகாண முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த நகர்வை NDP தலைவர் Jagmeet Singh பாராட்டினார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நாயகத்திற்கும் மத்திய நிதியமைச்சருக்கும் இடையிலான இணக்கப்பாடுகளின் ஒரு பகுதியாக, Liberal அரசாங்கம் வட்டி விகித உயர்வை நிறுத்துமாறு மத்திய வங்கியிடம் கோர வேண்டும் என NDP தெரிவித்தது.

வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என மத்திய வங்கி புதன்கிழமை அறிவித்தது.

Related posts

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan

கனடாவில் 30 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றனர்

Gaya Raja

Loblaw நிறுவனத்திற்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தலைவர் நியமனம்

Leave a Comment