September 23, 2026
தேசியம்
செய்திகள்

இலையுதிர்கால வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும்?

இலையுதிர் காலத்தில் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையாக அமையும் என தெரியவருகிறது.

கோடை கால விடுமுறையின் பின்னர்  நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கின்றன.

இந்தத் கூட்டத் தொடரின் முதல் சில வாரங்கள், Mark Carney அரசாங்கம் அடுத்த மாதம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என Mark Carney தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த பற்றாக்குறை குறித்த மேலதிக விபரங்களை ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் வெளியிடவில்லை.

இந்த நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் முதல் முறையாக Conservative தலைவர் Pierre Poilievre-வை பிரதமர் எதிர்கொள்ளவுள்ளார்.

இருவருக்கும் இடையிலான கேள்வி நேரத்தில் வரவு செலவுத் திட்டம் பிரதான விவாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Chrystia Freeland அரசியலில் இருந்து வெளியேற்றம்?

Lankathas Pathmanathan

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan

சில மணிநேரத்தில் இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment