தேசியம்
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் Toronto பல்கலைக்கழக வளாகத்தில் முகாம்

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் Toronto பல்கலைக்கழக வளாகத்தில் முகாம் அமைத்தனர்.

பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்கள் வியாழக்கிழமை (02) அதிகாலை Toronto பல்கலைக்கழக வளாகத்தில் வேலியிடப்பட்ட பகுதியை உடைத்து சென்று ஒரு முகாமை அமைத்தனர்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அங்கு தங்கி இருக்க உள்ளதாக போராட்டக்காரர்கள்  உறுதியளித்தனர்

இதுபோன்றதொரு நிலையை எதிர்பார்த்து அதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் வேலி அமைத்திருந்தது.

ஆனால் போராட்டக்காரர்கள் அந்த வேலியை தாண்டி சென்று முகாமை அமைத்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போதிலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

இஸ்ரேலுடன் இராணுவ உறவுகளை கொண்ட நிறுவனங்களிலிருந்து பல்கலைக்கழகம் விலகவும், சில இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடன் உறவுகளைத் துண்டிக்கவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

பலஸ்தீன ஆதரவு முகாம்கள் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைகழகங்களிலும், கனடாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் உருவாகியுள்ளன.

இதில் McGill, UBC ஆகிய கனடிய பல்கலைகழகங்களும் அடங்குகின்றன.

Related posts

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

Toronto காவல்துறைத்கு புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

ரஷ்யா, சீனா குறித்து NATO தலைவர் கனடாவை எச்சரித்தார்

Lankathas Pathmanathan

Leave a Comment