தேசியம்
செய்திகள்

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

கனடாவை நோக்கி பயணித்ததாக நம்பப்படும் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மூழ்கிய படகில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அகதிகள் ஆபத்தில் இருக்கக்கூடும் என திங்கள் காலை அறிந்தவுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியதோடு, இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பிரதிநிதியிடம் நேரடியாகப் பேசியதாக கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தேசியத்திடம் உறுதிப்படுத்தினார்.

தமிழ் அகதிகளை வியட்நாமில் தரையிறக்க அனுமதிக்கும் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்பதை முழுமையாக உணர்ந்தாலும், இது போன்ற ஆபத்தான பயணங்களும் அதன் விளைவுகளும் பேரழிவை ஏற்படுத்தும் என ஹரி ஆனந்தசங்கரி நினைவு படுத்தியுள்ளார்.

தனது அலுவலகம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தொடரும் என உறுதியளித்த ஹரி ஆனந்தசங்கரி, UNHCR, வியட்நாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராவுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

கடந்த மாதம் 1.3 மில்லியன் கனேடியர்கள் முதலாவதாக பெற்றதை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றனர்

Gaya Raja

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment