Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கிள்ளி செல்லையா தாக்கல் செய்துள்ளார்.
Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தல் வேட்புமனு திங்கட்கிழமை (30) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளான திங்களன்று காலை கிள்ளி செல்லையா தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
2018 நகரசபைத் தேர்தலில் Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்தில் கிள்ளி செல்லையா போட்டியிட்டிருந்தார்.
5 தமிழர்கள் உட்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் அவர் 1,961 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தைப் பெற்றார்.
இந்தத் தொகுதியை Khalid Usman 3,308 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.