கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
வெள்ளை மாளிகை இந்த அறிவித்தலை திங்கட்கிழமை (30) வெளியிட்டது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து அறிவித்த Digital சேவை வரியை கனடா இரத்து செய்வதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா கடந்த வாரம் Digital சேவை வரியை அறிவித்தது.
இந்த நிலையில் கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்த அமெரிக்கா வெள்ளிக்கிழமை (27) தீர்மானித்தது.
கனடாவில் நடைபெற்ற G7 தலைவர்கள் மாநாட்டில் இந்த வரியை நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடாவிடம் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் Kevin Hassett திங்களன்று தெரிவித்தார்.
கனடா அதற்கு இணங்கிய நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பலாம் என அவர் கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக, திங்களன்று அமுலுக்கு வரவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்த Digital சேவை வரியை கனடா இரத்து செய்தது.
இந்த நிலையில் போர்ச்சுகல் மீண்டும் ஆரம்பிப்பதை கனடாவின் நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.
July 21-ஆம் திகதிக்குள் ஒரு ஒப்பந்தத்தில் உடன்படுவதற்காக வர்த்தக பேச்சுவார்த்தைகளை கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க அதிபர் Donald Trump ஆகியோர் மீண்டும் ஆரம்பிப்பார்கள் என ஒரு அறிக்கையில் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.