கனடாவின் தேசிய Holocaust நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட Ottawa நகர வழக்கறிஞர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
46 வயதான Iain Aspenlieder மீது நினைவுச் சின்னத்திற்கு தீங்கு விளைவித்ததாக Ottawa காவல்துறை வெள்ளிக்கிழமை (27) குற்றம் சாட்டியது.
இவர் Ottawa நகர வழக்கறிஞர் என அடையாளம் காணப்பட்டார்.
தலைநகர் Ottawa-வில் அமைந்துள்ள கனடாவின் தேசிய Holocaust நினைவுச் சின்னம் இந்த மாத ஆரம்பத்தில் சேதப்படுத்தப்பட்டது.
இந்த நாச வேலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட Ottawa நகர வழக்கறிஞர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக நகர முதல்வர் Mark Sutcliffe ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.
குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் விடுப்பில் இருந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்ந்து நகரத்தில் பணிபுரியவில்லை என்பதை நகர சட்டத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இரவோடு இரவாக சிவப்பு வண்ண பூச்சுடன் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நினைவுச் சின்னத்தை பராமரிப்பு குழுவினர் சுத்தம் செய்தனர்.
“Feed Me” என்ற வாசகம் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தில் வரையப்பட்ட புகைப்படம் வெளியானது.