மத்திய அரசு அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தக தடைகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
உள்நாட்டு வர்த்தக அமைச்சர் Chrystia Freeland திங்கட்கிழமை (30) ஒரு அறிக்கையில் இதனை அறிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத்தைத் தடுக்கும், கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 53 கூட்டாட்சி விலக்குகளையும் மத்திய அரசாங்கம் இப்போது நீக்கியுள்ளதாக Chrystia Freeland கூறினார்.
கடந்த தேர்தலுக்கு முன்னர் பிரதமர் Mark Carney, மத்திய அரசின் தடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தார்.
ஆனாலும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, சில தடைகள் மட்டுமே எஞ்சியிருந்தன.
கனடா தினத்திற்குள் உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதாக Mark Carney உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.