செம்மணியில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி Toronto-வில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய Toronto-வில் மக்கள் அதிகம் கூடும் Dundas சதுக்கத்தில் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு கண்டனப் பேரணி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) பிற்பகல் 3 மணி முதல் இந்த கவன ஈர்ப்பு, கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது.
செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டி தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த கண்டன, கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற உள்ளது.