வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னர் கனடிய விமான நிலைய செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
6 கனடிய விமான நிலையங்கள் வியாழக்கிழமை (3) காலை தற்காலிக சேவை நிறுத்தங்களை அமுல்படுத்தின.
வெடிகுண்டு மிரட்டல்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவையைப் பாதித்ததை தொடர்ந்து இந்த சேவை நிறுத்தங்கள் அமுல்படுத்தப்பட்டன.
Ottawa, Montreal, Edmonton, Winnipeg, Calgary , Vancouver. விமான நிலையங்களை இந்த சேவை நிறுத்தங்கள் பாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Vancouver விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் வியாழன் அதிகாலை கிடைத்ததாக RCMP கூறியது.
கட்டுப்பாட்டு கோபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலுக்கு பின்னர் அங்கு எந்த அச்சுறுத்தலும் கண்டறியப்படவில்லை என RCMP ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதனால் 6 கனடிய விமான நிலையங்களில் தற்காலிகமாக விமான சேவை தடைகள் அமுலில் இருந்தது எனவும், அவை காலை 7:40 மணியளவில் அகற்றப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகளின் விளைவாக, வியாழன் முழுவதும் சில விமான சேவைகள் தாமதங்களை எதிர்கொண்டன.
இந்த அச்சுறுத்தலின் தன்மையை வெளியிட முடியாது என Nav கனடா தெரிவித்துள்ளது.