தேசிய அளவில் Conservative கட்சியை விட Liberal கட்சி மக்கள் ஆதரவில் 13 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடை விடுமுறையை ஆரம்பிக்கும் நிலையில் Liberal கட்சி மக்கள் ஆதரவில் முன்னிலையில் உள்ளது.
Conservative தலைவர் Pierre Poilievre இடைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்த மக்கள் ஆதரவு விபரம் வெளியாகியுள்ளது.
பிரதமர் Mark Carney-யின் Liberal கட்சிக்கான ஆதரவு 45.2 சதவீதமாகவும், Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சிக்கான ஆதரவு 30.8 சதவீதமாகவும், NDP கட்சிக்கான ஆதரவு 12.1 சதவீதமாகவும் உள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இரண்டு மாதங்களில், இரண்டாவது இடத்தில் உள்ள Conservative கட்சியை விட Liberal அரசாங்கம் மக்கள் ஆதரவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.