தேசியம்
செய்திகள்

Alberta, British Colombia மாகாணங்களில் தொடரும் காட்டுத்தீ

Alberta மாகாணம் முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக, வழமையை விட அதிகமான வெப்பநிலை காரணமாக தீ பரவி வருகிறது.

திங்கட்கிழமை (08) காலை வரை Alberta முழுவதும் 105 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.

இவற்றில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

Albertaவில் சனிக்கிழமை (06) அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

தீ காரணமாக சுமார் 29 ஆயிரம் பேர் தங்கள் இல்லங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

British Colombiaவில் கடந்த January முதல் 131 காட்டுத்தீ பதிவாகியுள்ளது.

இது 10 ஆண்டு சராசரியை விட அதிகமானதாகும்.

இந்த காட்டுத் தீ காரணமாக, சுற்றுச்சூழல் கனடா, வடக்கு Albertaவின் பெரும்பாலான பகுதிகளுக்கும், வடக்கு British Colombiaவின் சில பகுதிகளுக்கும், வடமேற்கு Saskatchewanனின் ஒரு சிறிய பகுதிக்கும் சிறப்பு காற்றின் தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த தீயின் காரணமாக புகை இப்போது வடக்கு Ontario வரை பரவியுள்ளதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவிக்கின்றது.

Related posts

வட்டி விகிதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி காயம்!

Gaya Raja

281 கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment