தேசியம்
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம்

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

கடந்த வாரத்தில் Ottawa ஆற்றில் பெருக்கெடுத்து, தலைநகர் பகுதியிலும் Quebecகிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் 89 நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Ottawaவில் கடந்த வாரம் 60 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது.

Quebecகில் வெள்ளம் காரணமாக சுமார் 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக அதிகரித்த நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (07) Quebec அதிகாரிகள் தெரிவித்தனர்.

Quebecகில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இரண்டு தன்னார்வ தீயணைப்பு படையினர் கடந்த வாரம் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடத்தப்பட்ட Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 வெகுமதி

Lankathas Pathmanathan

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Gaya Raja

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Leave a Comment