Liberal அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த Conservative கட்சி உறுதியளித்துள்ளது.
Liberal அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விலத்தி தேர்தலைத் தூண்டுவதற்கு முயற்சிக்க உள்ளடகா Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.
Liberal அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் உதவ ஏனைய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது.
இந்த நிலையில் சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் ஆட்சி காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த வாரம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் நிலையில், Conservative கட்சியால் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என Pierre Poilievre கூறினார்.
சிறுபான்மை Liberal அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு, NDP, Bloc Québécois கட்சிகளின் ஆதரவு Conservative கட்சிக்கு தேவை என்பது குறிப்பிட்தக்கது.
Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வாக்களிக்காமல் விட்டால் NDP – Liberal ஒப்பந்தம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது என்பது அர்த்தப்படும் என Pierre Poilievre தெரிவித்தார்
ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்த எந்த உறுதிப்பாட்டையும் Jagmeeet Singh வெளியிடவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமான கருத்துக்களை அண்மையில் Bloc Québécois வெளியிட்டு வருகிறது.
Liberal அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஈடாக Quebec மாகாணத்திற்கு தேவையான ஆதாயங்களைப் பெற தயாராக உள்ளதாக Bloc Québécois கூறியது.
Liberal அரசாங்கம் முன்வைக்கும் திட்டம் Quebec மாகாணத்தின் நலனுக்கு ஆதாரவாக இருந்தால், Bloc Québécois கட்சி அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் Quebec மாகாண நலனுக்கு எதிராக இருந்தால் கட்சி அதற்கு எதிராக வாக்களிக்கும் எனவும் கட்சி தலைவர் Yves-François Blanchet தெரிவித்தார்.
தமது இந்த முடிவில் தேர்தல் விளைவுகள் பொருட்படுத்தப்படமாட்டாது என அவர் கூறினார்.
Conservative கட்சி 119 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.
Justin Trudeauவின் 154 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு அவர்களுக்கு 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவையாகிறது.
NDP ஆதரவு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், 32 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் Bloc Québécois அதிகார சமநிலையை கொண்டுள்ளது.