September 28, 2026
தேசியம்
செய்திகள்

கலைக்கப்படும் Peel பிராந்தியம்?

Peel பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை Ontario அரசாங்கம் வியாழக்கிழமை (18) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி விவகார அமைச்சர் Steve Clark வியாழளன்று இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார்.

இந்த செய்தி மாநாட்டியில் மூன்று Peel பிராந்திய நகர முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என தெரியவருகிறது.

இந்த அறிவித்தல் Mississauga, Brampton நகரங்களை சுதந்திர நகரங்களாக மாற வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் Caledon நகரின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Mississauga நகர முதல்வர் Bonnie Crombie வியாழன் மாலை தனது நகர சபை உறுப்பினர்களுடன் செய்தியாளர் சந்திப்பொன்று நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related posts

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja

மீண்டும் அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

தமிழர்கள் மூவர் பலியான விபத்து குறித்த இறுதித் தீர்ப்பு April மாதம் வெளியாகும்!

Lankathas Pathmanathan

Leave a Comment