September 28, 2026
தேசியம்
செய்திகள்

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Mexicoவின் கடற்கரை நகரமான Puerto Escondidoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனேடியர் ஒருவர் திங்கட்கிழமை (15) சடலமாக வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என அரசு வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர்.

இறந்தவர் Quebec மாகாணத்தை சேர்ந்த 27 வயதான Victor Masson என அடையாளம் காணப்பட்டார்.

இந்த கொலை குறித்த மேலதிக விபரங்கள் எதையும் வழக்கறிஞர்கள் வெளியிடவில்லை.

Mexicoவின் தென் மாநிலமான Oaxacaவில் ஒரு வாரத்திற்குள் கொல்லப்பட்ட இரண்டாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இவராவார்.

Related posts

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா தயாராக இருக்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர்

கனடாவில் COVID தொற்றால் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு!

Gaya Raja

Juno கடற்கரையில் D-Day 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment