September 29, 2026
தேசியம்
செய்திகள்

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் மற்றொரு சந்தேக நபர் கைது

Toronto Pearson விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான Archit Grover கைது செய்யப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

Brampton நகரை சேர்ந்த இவர் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து Toronto விற்கு விமானம் மூலம் வந்தடைந்த அவர் கைது செய்யப்பட்டார்

இவரது கைதுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு Toronto விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒன்பது சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

22.5 மில்லியன் டொலர் Pearson தங்கக் கொள்ளை கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஏற்கனவே கைதாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள்;

Georgetown நகரை சேர்ந்த 43 வயதான Ammad Chaudhary,
Oakville நகரை சேர்ந்த 40 வயதான Amit Jalota,
Brampton நகரை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம்,
Toronto நகரை சேர்ந்த 37 வயதான Ali Raza,
Brampton நகரை சேர்ந்த 54 வயதான Parmpal Sidhu.

பின்வரும் நபர்களுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது;

Brampton நகரை சேர்ந்த 31 வயதான Simran Preet Panesar,
Mississauga நகரை சேர்ந்த 42 வயதான Arsalan Chaudhary.

தவிரவும் Brampton நகரை சேர்ந்த  25 வயதான Durante King-Mclean என்பவரின் கைதுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இவர் தற்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

April 17, 2023 அன்று Air Canada வளாகத்தில் இருந்து சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்புள்ள 6,600 தூய தங்கக் கட்டிகள், சுமார் 2.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பல்வேறு வெளிநாட்டு பணம் திருடப்பட்டது.

சூரிச்சில் இருந்து விமானத்தில் வந்த இந்த தங்கம், பணம் திருட்டு குறித்த இரகசிய, கூட்டு விசாரணை “Project 24K” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கருதப்படுகிறது.

Related posts

68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்த தகவல்களை அனுப்பும் மத்திய அரசு!

Lankathas Pathmanathan

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

Lankathas Pathmanathan

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment