தேசியம்
செய்திகள்

Whitby விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் நிறைவு

நெடுஞ்சாலை 401 இல் April 29 நிகழ்ந்த விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் இந்த வாரம் நடைபெற்றது.

நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம்  விபத்துக்குள்ளானதில்  நால்வர் பலியாகினர்.

இதில் 60 வயதான மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை,  55 வயதான மகாலட்சுமி அனந்தகிருஷ்ணன் ஆகியோரும் அவர்களின் மூன்று மாத பேரன் ஆதித்யா கோகுல்நாதும் அடங்குகின்றனர்.

இவர்களில் மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை, மகாலட்சுமி அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் இறுதி கிரியைகள் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் கனடா வந்திருந்தனர்.

ஆதித்யா கோகுல்நாதின் இறுதி கிரியைகள் புதன்கிழமை (08) நடைபெற்றது.

இந்த விபத்தில் Ajax குடியிருப்பாளர்கள் ஆதித்யா கோகுல்நாதின் பெற்றோர் கோகுல்நாத் மணிவண்ணன், அஷ்விதா ஜவஹர் ஆகியோர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து “எங்கள் வாழ்வில் ஒரு அழியாத வடுவாக அமைந்துள்ளது” என ஆதித்யா கோகுல்நாதின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் சந்தேக நபர்களில் ஒருவராக 21 வயதான  Gagandeep Singh அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகன சாரதியான இவர் இந்த விபத்தில் மரணமடைந்தார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த தொடர் குற்றங்களில் கைதாகி பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இரண்டாவது சந்தேக நபரான 38 வயதான ஆண் பயணி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.

Clarington நகரில் நிகழ்ந்த LCBO கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைக்கு Durham பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் சந்தேக நபர்கள் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களின் வாகனம் காவல்துறையினரால் பின் தொடரப்பட்டபோது, சந்தேகத்திற்குரிய வாகனம் தவறான திசையில் சென்று 401 நெடுந்தெருவில் நுழைந்தது.

இதன் போது பல வாகனங்கள் நெடுஞ்சாலை 412 இன் கிழக்கே மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் என Durham காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja

கனடிய மேல் சபை உறுப்பினர் COVID காரணமாக மரணம்

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் – அதிகரிக்கும் அழுத்தம்!

Gaya Raja

Leave a Comment